Monday, December 26, 2011

முருங்கைக்காய் வடை


Posted On Dec 26,2011,By Muthukumar
மெதுவடை, மசால்வடை சாப்பிட்டு இருப்பீர்கள். சற்று மாறுதலாக முருங்கைக்காய் வடை செய்து பாருங்கள். புதிய சுவையாக உங்கள் நாக்கை ஈர்க்கும். செய்முறை இதோ...
தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு - 2 கப்
பச்சை மிளகாய் - 6
முருங்கைக் காய் - 4
பூண்டு - 2 பல்
பெரிய வெங்காயம் - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் (ரீபைண்ட்) - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
* கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
* முருங்கைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வேக வைத்து, ஆறியதும் நடுவிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
* கடலைப் பருப்புடன், மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
* அத்துடன் முருங்கைக்காய் சதைப் பகுதியையும் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பிசைந்து மாவு தயாரிக்கவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
* முருங்கைக்காய் வடை வித்தியாசமான சுவையுடன், சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

No comments:

Post a Comment